டுவிட்டர், பேஸ்புக்ல வன்மமா போஸ்ட் போடறவங்களா நீங்க? கொஞ்சம் கவனமா இருங்க!

கடந்த 10 வருடங்களுக்கு மேல் டுவிட்டர் பேஸ்புக் போன்ற வலைதளங்களை அதிகம் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளங்கள் வந்ததும் சிலர் வன்மமா போஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

சாதி பிரச்சினை, இனப்பிரச்சினை,மொழி மதம் என பிரச்சினைகளை பேசுகிறேன் என பேசி தவறான சண்டை சச்சரவுகளுக்கும், பெரிய பெரிய கலவரங்களுக்கும் வழி வகுக்கின்றனர் சிலர்.

சிலர் பாலியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களில் அசிங்கமாக எழுதி வருகின்றனர். இது போல எழுதும் சில தனிப்பட்ட நபர்களின் டுவிட்டர் கணக்குகள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்திய 73 டுவிட்டர் கணக்குகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக மத்திய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் காழ்ப்புணர்வை தூண்டக்கூடிய வகையில் பதிவுகள் இட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment