ட்விட்டர் இலவசமாக பயன்படுத்தலாம்; ஆனால்..?

ட்விட்டரை பயன்படுத்தும் அரசு சார்ந்த மற்றும் வணிக பயனர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தொடர்ந்து வரத்தை 3.3 லட்சம் கோடி கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். இந்நிலையில் முதல் முறையாக ட்விட்டர் நிறுவனத்தை மாற்றுவது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

குறிப்பாக வெரிஃபிகேஷன், ஓப்பன் அல்கோரிதம் போன்ற பல பல நுட்பங்கள் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் புதிய அறிவிப்பை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதில் சாதாரண பயனாளிகள் டுவிட்டரை எப்போதும் இலவசமாக பயன்படுத்தலாம் என கூறினார். ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்தவர்களுக்கு  சிறிய கட்டணத்தை வசூலிக்கப்பட லாம் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment