Connect with us

ஒரே நொடியில் தரைமட்டமான இரட்டை கோபுரம்: வைரலாகும் வீடியோ!!!

Tamil News large 3108674

செய்திகள்

ஒரே நொடியில் தரைமட்டமான இரட்டை கோபுரம்: வைரலாகும் வீடியோ!!!

டெல்லியை அடுத்த நொய்டாவில் விதிமீறல்களுக்கு  எதிராக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 40 அடுக்கு இரட்டை கோபுரம் 9 வினாடிகளில் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை கோபுரத்தை பொருத்தவரையில் தனியார் கட்டுமான நிறுவனமான சூப்பர் டெக் நிறுவனத்தால் கட்டப்பட்டது. குறிப்பாக கடந்த 2005-ம் ஆண்டு 14 மாடிகளை கட்ட அனுமதி பெற்ற நிலையில் விதிகளை மீறி, 2012-ம் ஆண்டு 40 மாடிக்களை அந்நிறுவனம் கட்டியது.

இந்நிலையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் மக்கள் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட, கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்டதை உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினத்தில் கட்டிடம் இடிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன் படி, தற்போது சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு, இரட்டை கோபுரம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top