12ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம்-இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…!!

தமிழகமெங்கும் தொடர்ந்து மாணவர்களின் சண்டையானது அதிகரித்து உள்ளது. அதுவும் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் சாலைகளில் தினம்தோறும் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த சண்டையின் காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்து தமிழகமெங்கும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் மூன்று மாணவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.

சமுதாய கயிறு விவகாரத்தை மறைக்க முயன்ற கூறி பள்ளக்கால் புதுக்குடி அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள் தீபா பாக்கியமேரி, தமிழ்ச்செல்வனை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment