டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரதமரை அவமானப்படுத்தினார்களா? விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
பொதுவாக டிவி ஷோக்களில் சிலர் வரம்பு மீறுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் இருந்தபோது நடுநிலையான செய்திகளை மட்டும் சொல்லி வந்தது.
அதன் பிறகு சேட்டிலைட் சேனல்கள் பெருகிய பிறகு செய்தி சேனல்களும் பெருகின. சில சேனல்கள் நடுநிலையை மறந்து விட்டு தங்களுக்கு சாதகமாக எந்த ஒரு ரியாலிட்டி ஷோவையும் நடத்துகின்றனர்.
அரசியல் சம்பந்தமான விவகாரத்தில் ஒரே கருத்துடைய 4 பேரை வைத்துக்கொண்டு மாற்றுக்கருத்துடைய 1 நபரை வைத்து விவாதம் நடத்துவதும் இது போல் ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் இது போல நடந்த ரியாலிட்டி ஷோவில் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி இருந்ததாக தெரிகிறது.
இது மத்திய அமைச்சர் முருகன் மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய தகவலில் கூறி இருப்பதாவது.
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு
அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்
என மாநில தலைவர் அண்ணாமலை டுவிட் செய்திருக்கிறார்.
