தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

சென்னையில் பருவமழை தொடங்க இருப்பதால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் எம்.ஜி.ஆர் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தோட்டப்பட்டது.

இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முத்துக்கிருஷ்ணன் என்ற இளைஞர் பள்ளத்தில் தவறி விழுந்தார்.

தீபாவளி புத்தாடையுடன் 2 பள்ளி மாணவிகள் மாயம்… திண்டுக்கலில் பரபரப்பு!!

இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் படி, சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணி… தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி!!

மேலும், பத்திரிக்கையாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment