சூர்யாவின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் விருமன்.இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். விருமன் படம் வெளியான முதல் நாளிலே ரூ.7.23 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தர்ர்ப்பொழுது வரை 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
சூர்யாவிற்க்காக பாலிவுட் ஹீரோயினை களமிறக்கும் சிறுத்தை சிவா !
கார்த்தியின் விருமன் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீடு குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவியும், ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் தளமும் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.