டி.வி நடிகை தூக்கிட்டு தற்கொலை: முன்னாள் காதலன் கைது!!

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷாலி விவகாரம் தொடர்பாக அவருடைய முன்னாள் காதலன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷாலி தக்கார் கடந்த 15-ம் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் அவருடைய தற்கொலைக்கு முன்னாள் காதலன் ராகுல் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தார். அதே போல் முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாக போலீசாருக்கு கடிதம் ஒன்று சிக்கியது.

அதே சமயம் வைஷாலியுடன் காதல் பிரிவுக்கு பிறகு பல்வேறு வதந்திகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் போலீசார் ராகுலை இந்தூரில் வைத்து கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.