60 அடி தூரம் ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!

தூத்துக்குடியில் திடீரென கடல் நீர் 60 அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல கடல்களில் திடீரென பெரிய அலைகள் தோன்றி ஊருக்குள் தண்ணீர் வருவதும் அதேபோல் கடல் உள்வாங்குவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றது. குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி கடல்களில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்பதும் குறிப்பாக அமாவாசை நாட்களில் கடல் உள்வாங்குவதை அடிக்கடி பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் உள்வாங்குவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வரும் நிலையில் தற்போது திடீரென தூத்துக்குடியில் கடல் நீர் 60 அடி தூரம் ஊருக்குள் வந்த நிகழ்வு அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள தாளமுத்து மொட்டை கோபுரம் பகுதி, ராஜபாளையம் பகுதி ஆகிய இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடல் நீர் 60 அடி தூரம் வரை ஊரை நோக்கி வந்தது. அப்போது கடற்கரை அருகே உள்ள தற்காலிக கட்டடங்கள் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தது என்பதும் ஒரு கோவிலுக்குள் கடல் நீர் புகுந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அதே பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் இருந்ததால் 60 அடி தூரம் வரை ஊருக்குள் கடல் தண்ணீர் வந்துள்ளது. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பகல் நேரம் என்பதால் எந்தவித சேதமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் கடலுக்குள் சென்று விட்டதாகவும் மீண்டும் அதை மீண்டும் பணி நடைபெற்று வருவதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

திடீரென கடல் நீர் 60 அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்ததை அடுத்து தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடல் நீர் ஆய்வாளர்கள் கூறும்போது அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் நீர் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந்த சமயத்தில் கடல் நீர் ஊருக்குள் போவது என்பது சாதாரண நிகழ்வுதான் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை என்று அந்த பகுதியில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews