புயல் நெருங்கும் வேளையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அச்சம்

இன்னும் சில மணி நேரங்களில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென கடல் உள்வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை நோக்கி நெருங்கி வருகிறது என்றும் இந்த புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்பதால் பலத்த மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் புயல் கரையை கடக்கும்போது சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மகாபலிபுரம் பகுதியில் தேசிய பேரிடர் படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் திடீரென தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பீச் ரோட்டில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கி உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் சற்றுமுன் வந்த தகவலின் படி கன்னியாகுமரியில் உள்ள கடலும் நீண்ட தூரம் உள்வாங்கி இருப்பதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுவாக சுனாமி நேரங்களில்தான் கடல் உள்வாங்கும் என்ற நிலையில் தற்போது புயல் நெருங்கும் வேளையில் கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியாகவும், புரியாத குழப்பமாகவும் உள்ளது என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.