அதிபயங்கர நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுப்பு; 190க்கும் மேற்பட்டோர் பலி!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயுபைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலி சுனாமி பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.