செவ்வாய்க்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

இந்தக் கிழமையின் பெயரில் அதன் அதிபதி இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு உரிய கிழமை செவ்வாய்கிழமையாகும். பொதுவாக இந்த கிழமையில் தென் இந்தியாவில் எந்த வித சுப காரியங்கள் செய்வது இல்லை. ஆனால் வடமாநிலத்தில் இந்த கிழமையை பெரிதும் கொண்டாடுவார்கள். இதற்கு பெயரே மங்கள்வார். இந்த தேதியில் இவர்கள் திருமணம், வீடு கட்டுவது, என்று அனைத்து காரியங்களையும் செய்வார்கள். நம் தென் இந்தியாவில் இந்த கிழமையை எந்த ஒரு காரியம் செய்வதற்கும் ஏற்றது அல்ல என்று ஒதுக்கி விட்டார்கள்.

செவ்வாய் அதிபதியான ராசிகள் மேஷம் மற்றும் விருச்சிகம். இவர்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். உழைக்க அஞ்ச மாட்டார்கள். நாளைக்கு என்று பேச்சுக்கே இவர்களிடம் இடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதேனும் வேலை அல்லது பொறுப்பு இருந்தால் முடித்து விடுவார்கள். இவர்கள் வேகமாக செய்வதால் சில நேரங்களில் எடுக்கும் முடிவுகள் தவறாக அல்லது சரியாக கூட இருக்கலாம். இவர்கள் எடுக்கும் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

இவர்களிடம் கோபம் அதிகமாக இருக்கும். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருப்பது போல யாருக்கேனும் உதவி என்று வந்துவிட்டால் ஓடிப்போய் முதல் ஆளாக இவர்கள் தான் உதவிசெய்வார்கள். பெரும்பாலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் போலீஸ், சட்டம், நீதித்துறை, விளையாட்டுத்துறை, சினிமா, மிலிட்டரி போன்ற துறையில் இருப்பார்கள்.

இவர்கள் நிறைய எனர்ஜியுடன் காணப்படுவார்கள். பெரும்பாலும் செவ்வாய் கிழமையில் எந்தவித செயல் அல்லது முயற்சி மேற்கொள்ள கூடாது என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் இந்த நாட்களில் தான் நீங்கள் அதிகமாக செயல்படுவீர்கள். இந்த நாட்கள் மற்ற நாட்களை விட உங்களை சுறுசுறுப்பாக வைத்து இருக்கும்.

செவ்வாய் சிவப்பு மற்றும் ரத்தம் சம்பந்தபட்டதால் மருத்துவப் படிப்பு, சிகிச்சை மேற்கொள்ளலாம். ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் அவர்கள் கட்டிட துறை மற்றும் மருத்துவராக பணிபுரியலாம். இந்தக் கிழமையில் சண்டை, சச்சரவு ஏதேனும் நடந்தால் அது பெரிதாக பிரிவினை வரை மாறும். இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே கஷ்டப்பட்டு தான் முன்னேற்றம் காண்பார்கள். செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களுக்கு சோகம் நிறைந்த வாழ்கை இருந்தாலும் இறுதியில் பட்ட துன்பங்கள் யாவும் மறைந்துவிடும்.

இவர்கள் தைரியத்துடனும் மற்றும் கொடுக்கும் வேலையை சரியாக முடித்து காட்டுவார்கள். இவர்களிடம் போராடும் குணம், போட்டி, வெற்றி போன்ற பண்புகள் இயல்பாகவே இருக்கும். இவர்கள் சண்டை, தடைகள், போராட்டங்கள் தாண்டி தான் வெற்றி புரிவார்கள்.

இவர்கள் படிப்பு, காதல், வேலை என்று அனைத்திலும் சண்டை போட்டு தான் வெற்றி அடைவார்கள். சண்டை என்பது தேவையானதாக இருக்கும். படிப்பில் போட்டிகள் கடந்து ஜெயிக்க வேண்டும், காதல் பெற்றவர்களிடம் சண்டை போட்டு அவர்களிடம் சம்மதம் பெற வேண்டும். வேலையில் அதிகாரியிடம், சகஊழியரிடம் சண்டை போட்டு தான் தங்கள் பணியை தக்க வைத்து கொள்ள முடியும்.

செவ்வாய் கிழமையில் வணங்க வேண்டிய கடவுள் முருகன். அவரை இந்த கிழமையில் வணங்கி உங்கள் காரியங்களில் உள்ள தடைகளை நீக்கி வெற்றி காணலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.