Connect with us

ஓபிஎஸ் அணி ஓகே; எடப்பாடி அணியுடன் வாய்ப்பே இல்லை!! டிடிவி பேட்டி;

ops dinakaran

தமிழகம்

ஓபிஎஸ் அணி ஓகே; எடப்பாடி அணியுடன் வாய்ப்பே இல்லை!! டிடிவி பேட்டி;

தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் பெரும் உட்கட்சி பூசல் நிலவுகிறது. ஏனென்றால் அதிமுகவின் இரு பெரும் தலைவர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு கொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளது. இதன் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் அவ்வப்போது அதிமுகவினை பற்றி கருத்தினை பேட்டி அளித்துக் கொண்டு வருவார்.

மேலும் அவர் தேனி மாவட்டத்தின் கூட்டத்திற்கு சென்ற போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் டிடிவி தினகரன் கூறிய பேட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சி அளித்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி ஓ பன்னீர்செல்வம் தரப்பினருடன் இணைய வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் தகவல் அளித்துள்ளார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனஆமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top