எடப்பாடியால அது முடியவே முடியாது; அடித்துக்கூறும் டிடிவி – காரணம் என்ன?

எடப்பாடி பழனிச்சாமியால் தனியாக தேர்தல் நின்று வெற்றி பெற முடியாது எனவும் உள்ளாட்சித் தேர்தலில் தனது சொந்த ஊரில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவும் செய்ய இயலாது அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணி தேர்தலில் வெற்றி பெறும் எனக் கூறுவது அவரது ஜால்ராக்களின் பேச்சு எனவும், நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததை போல் எடப்பாடி யால் சந்திக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்?.

எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும்,அரசு நல்லது செய்தால் வரவேற்க வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார். இதனால் நான் திமுக கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள் எனவும் தெரிவித்தார்.

அரசியலில் எனது உயரம் என்ன என எனக்குத் நன்றாக தெரியும் என்றும் தினகரன் தெரிவித்தார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும் என்றும் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக மிகக் குறைவு இதனை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.