ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் 29 வயது இளைஞர் சிவபிரசாத் என்பவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் அமைச்சர் பெருமாள் சண்முகவேல் தலைமையில் 294 பேர் கொண்ட நிர்வாகிகள் குழு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் டிடிவி தினகரன் அறிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துரைப்போம் என்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்போம் என்றும் பண பலத்தை விட மக்கள் பலம் தான் பெரியது என்பதை நிரூபிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews