மாடு கொண்டு சென்றவர்களிடம் பணம் பறிக்க முயற்சி-இந்து மகாசபை பசு பாதுகாப்பு பிரிவினர் கைது!

திரைப்பட பாணியில் ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான வழிப்பறி சம்பவங்கள் யாரும் நடை மாறாத நெடுஞ்சாலை பகுதிகளில் நிகழ்கிறது. இந்தநிலையில் நம் தமிழகத்தில் மாடு கொண்டு சென்ற இடத்தில் வழிப்பறி நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது .

அதன்படி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எருமை மாடுகளை ஏற்றி சென்ற லாரியை மறித்து பணம் பறிக்க முயற்சி நிகழ்ந்துள்ளது. ஆந்திராவிலிருந்து எருமை மாடுகளை ஏற்றி வந்து லாரியை துறையூர் அருகே கிழக்குவாடியில் மறித்து வழிப்பறி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இந்து மகா சபையினர் ஈடுபட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரை தாக்கி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கிழக்குவாடியில் எருமைகளை ஏற்றி சென்ற லாரியை காரில் விரட்டி சென்று இந்து மகாசபை பசு பாதுகாப்பு நிர்வாகிகள் மடக்கியுள்ளனர்.

லாரியை ஓட்டி வந்த முஸ்தபா மற்றும் உதவியாளர்கள் மணிகண்டன், ரவி ஆகியோரை இந்து மகா சபையினர் அடித்து பணம் பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்து மகாசபையின் பசு பாதுகாப்பு பிரிவினர் தாக்கியதில் காயமடைந்த உதவியாளர் மணிகண்டன் துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்து மகாசபை பசு பாதுகாப்பு பிரிவு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சிரஞ்சீவி, கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment