கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஒன்றை தலைமை விவகாரமாகனது விஸ்வரூபம் எடுத்திருந்தது. இதன் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வந்தது.
அதன் ஒரு பதியாக ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்திருந்தது.
இதனை கொண்டாடும் விதத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் இனிப்பு வழக்கி, பட்டாசு வெடித்து வருகின்றனர். இந்த சூழலில் கட்சியை அடாவடியாக, சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில் உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன் என அறிக்கையின் மூலம் கூறியுள்ளார்.
அதோடு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பியதாகவும், இந்த நம்பிக்கை இன்று உண்மையாகி இருக்கிறது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.