Connect with us

ஜார்க்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!! முதலமைச்சர் பதவி?

election vote ballot.jpg.image .300.176

செய்திகள்

ஜார்க்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!! முதலமைச்சர் பதவி?

கடந்த சில நாட்களாகவே நம்பிக்கை வாக்கெடுப்பது அடுத்தடுத்து நடைபெறுவதாக காணப்படுகிறது. உலக அளவில் பாகிஸ்தான், இலங்கையில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆட்சி மாற்றமே நிகழ்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக இன்றைய தினம் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி கொண்டு வரும் நிலையில்  சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக இருந்த புகாரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக முதலமைச்சர் பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. எம்எல்ஏ பதவியில் இருந்து சோரன் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவானதால் அவரது முதல்வர் பதவிக்கும் சிக்கல் உருவாகியுள்ளது.

ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுத்தும் எதுவும் எடுக்காத நிலையில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராகியுள்ளார் .ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்எல்ஏக்கள் ரிசாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் ஜார்கண்ட் முக்தி மோர்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top