வாட்ஸ் அப் மூலம் மோசடி அழைப்புகள்.. அடையாளம் காண்பது எப்படி?

வாட்ஸ் அப்மூலம் பல்வேறு மோசடி அழைப்புகள் வருகிறது என்பதும் பக்கத்து வீட்டில் இருந்தால் கூட வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இது போன்ற மோசடி அழைப்புகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கு ட்ரூ காலர் என்ற தொழில்நுட்பத்தை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ட்ரூகாலர் மூலம் இதனை கட்டுக்குள் கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.

ஆன்லைனில் மோசடி செய்யும் நபர்கள் வாட்ஸ் அப்மூலம் குறுஞ்செய்தி தொலைபேசி அழைப்பு ஆகியவற்றை அனுப்பும்போது வாட்ஸ் அப் வழியை அவர்கள் பெரும்பாலும் தொடர்பு கொள்கின்றனர். இந்தியாவில் 50 கோடிக்கு அதிகமாக வாட்ஸப் பணியாளர்கள் இருப்பதால் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்வதன் மூலம் மோசடியாளர்கள் கண்டுபிடிக்கப்பட முடியாமல் போக வாய்ப்புள்ளது.

true callerஇந்த நிலையில் வாட்ஸ் அப் மூலம் அதிகரித்து வரும் மோசடியை தடுப்பதற்காக மெட்டா நிறுவனத்துடன் ட்ரூ காலர் இணைந்துள்ளது. இதன் மூலம் மோசடி அழைப்பு மற்றும் மோசடி மெசேஜ்களை பயனாளர்கள் எளிதில் கண்டுகொண்டு பிளாக் செய்யலாம். இப்போதைக்கு பீட்டா பயனாளர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைப்பதாகவும் விரைவில் உலகம் முழுவதும் இது அனைவருக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் ட்ரூ காலர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் சராசரியாக மாதம் ஒன்று 17 தேவையில்லாத அழைப்புகளை பெற்று வருவதாகவும் இதில் ஒரு சிலர் மோசடி அழைப்புகளும் இருப்பதால் பலர் தங்களது பணத்தை ஏமாந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள், மிஸ்டுகால் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை ட்ரூ காலர் மூலம் கண்டுபிடித்து அவற்றை பிளாக் செய்யலாம் அல்லது இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கலாம் என ட்ரூகாலர் தெரிவித்துள்ளது.

பயனர்கள் முதலில் தங்கள் போனில் ட்ரூ காலர் பீட்டா புரோகிராமிங் என்ற செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பீட்டா அப்டேட்டை இன்ஸ்டால் செய்து கொண்டு ட்ரூ காலர் ஓபன் செய்ய வேண்டும். அதில்  செட்டிங்ஸ் > காலர் ஐடி > வாட்ஸ்அப் மற்றும் இதர மெசேஞ்சர்களில் தெரியாத எண்களை அடையாளம் காணும் வகையில் ‘Toggle’-ஐ ஆன் செய்துவிட்டால் உங்கள் போன் பாதுகாப்பாகிவிடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.