தேர்வர்களே அலர்ட்!! டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு.!

தமிழகத்தில் வருகின்ற 2023-ம் ஆண்டின் டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் டெட் தேர்வு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேர்வுகள் மற்றும் காலிபணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன் படி, அரசு கலைக் கல்லூரி காண உதவி பேராசிரியர் தேர்வில் 4000 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இதற்கான தேர்வு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Capture 6
அதே போல் சட்டக் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அக்டோபரில் நடைபெறும் எனவும், உதவிப் பேராசிரியர் தேர்வில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இதற்கான தேர்வு மே மாதம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெட் தேர்வு அடுத்தாண்டு நடைபெறாமல் 2024-ம் ஆண்டும் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொறியில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிகளுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.