Connect with us

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திருப்பம்: செல்போன் தகவல்களை தர மறுக்கும் டிராய்…!

கொடநாடு

செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திருப்பம்: செல்போன் தகவல்களை தர மறுக்கும் டிராய்…!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூலையாக செயல்பட்ட கன கராஜின் செல்போன் பதிவுகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் 4 செல்போன்களை எரித்தனர்.

எரிந்த செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்துள்ள தனிபடை போலிசார் செல்போன் உரையாடல் மற்றும் தகவல்களை சேகரிக்க டிராயின் அனுமதி கேட்ட நிலையில் ஒத்துழைப்பு அளிக்கபடாமல் உள்ளது.

மேலும் கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளும் கொரோனா பரவலை காரணம் காட்டி விசாரணைக்கு அனுமதிப்பதில்லை என கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சாஜகான் தகவல்.

கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள பத்து பேரில் சயான், வாளையார் மனோஜ், உதயன், ஜித்தின்ஜாய் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top