நேற்றைய தினம் பல்லடம் பேருந்து நிலையத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏனென்றால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பஞ்சாப் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு குறைவாக இருந்தது. இதற்கு இந்தியாவில் உள்ள பல பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
நம் தமிழகத்திலும் குஷ்பு உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் பல்லடம் பேருந்து நிலையத்தில் பஞ்சாப் அரசை கண்டித்து பாஜக வினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர், அந்த ஆர்ப்பாட்டத்தில் தள்ளுவண்டி வியாபாரியை பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமார் தாக்கி இருந்தார்.
தள்ளுவண்டி தாக்கிய ராஜ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தின்போது தள்ளுவண்டி வியாபாரி பிரதமரை விமர்சித்ததாக கூறி பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். தள்ளுவண்டி வியாபாரி பாஜகவினர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தள்ளுவண்டி வியாபாரி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே திருப்பூர் மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.