தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக முன்னணி ஹீரோயினாகவும் கனவு கன்னியாக வும் வளம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு சென்னை அழகி பட்டம் பெற்றவர். அதை தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்தில் தோழியான தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.
அதன் பின் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஹீரோயின் ஆக அறியப்படுத்தப்பட்டார்.ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார்,மேலும் கலைமாமணி விருது விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் திரிஷா நடித்த மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வம் 2 ஆம் பாகத்திலும் அவர் நடித்து முடித்திருக்கிறார்.
மேலும் சதுரங்க வேட்டை 2, ராம் உள்ளிட்ட படங்களை தன்வசம் வைத்திருக்கிறார். பிருந்தா என்ற இணைய தொடரிலும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது நல்ல விஷயம். அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதைப் போன்றதாகும்’ என பதிவிட்டுள்ளார்.
மலையேற போகும் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு ! வெளியான மாஸான தகவல்கள் !
அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் த்ரிஷா யாரை குப்பை என குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது, சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் திரிஷாவிற்கு 39 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. இருமுறை காதல் தோல்வியை சந்தித்து உள்ளார்.
இந்நிலையில் திரிஷாவின் இந்த பதிவு ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது ,மட்டுமில்லாமல் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது, அதற்கும் அவரே தான் பதிலளிக்க வேண்டும்.