சூர்யாவை முந்திவிட்டார் த்ரிஷா: பரபரப்பான புகைப்படங்கள்

31eb56581d5502329683a2677acaad14

நடிகர்கள் சூர்யா மற்றும் மோகன்லாலை நடிகை த்ரிஷா முடிந்துவிட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது எ

ன சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது தோட்டத்தில் செடிகளை நட்டு அதன் பின்னர் அந்த மோகன்லால், சூரியா, த்ரிஷா உள்பட 5 நபர்களுக்கு அந்த சேலஞ்சை பார்வர்டு செய்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் இந்த சேலஞ்சை தான் ஏற்றுக்கொள்வதாக ட்விட்டரில் அறிவித்த த்ரிஷா இன்று தனது வீட்டின் தோட்டத்தில் இரண்டு செடிகளை நட்டு அது குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் 

இதனை அடுத்து சூர்யா மோகன்லாலுக்கு முன்பாகவே த்ரிஷா இந்த சேலஞ்சை முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு உதவும் வகையில் அதிக செடிகளை நடுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment