Entertainment
ஜோதிகா, கீர்த்தி சுரேஷை அடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் த்ரிஷா படம்!

கொரோனா வைரஸ் நேரத்தில் திரையரங்குகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஓடிடி பிளாட்பாரங்கள் தான். இந்த ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்வதால் லாபம் வராவிட்டாலும், போட்ட முதலீடு வந்துவிடுவதாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்
எனவே படத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுத்து மூலையில் முடக்கி வைக்காமல் ஓடிடியில் ரிலீஸ் செய்து போட்ட முதலீட்டினை எடுத்து விடலாம் என்று பல தயாரிப்பாளர்கள் ஓடிடியில் தங்களது படங்களை கொடுக்க முன்வந்தனர்
அந்த வகையில் ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தற்போது த்ரிஷா நடித்துள்ள படம் ஒன்றும் ஓடிடி ரிலீஸுக்கு தயாராக உள்ளது
த்ரிஷா, அரவிந்த் சாமி நடிப்பில் எச்.வினோத் கதை திரைக்கதை வசனத்தில் நிர்மல் இயக்கிய திரைப்படம் ’சதுரங்க வேட்டை 2’ நடிகர் மனோபாலா தயாரித்த இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீசாகவில்லை
இந்த நிலையில் தற்போது ஓடிடியில் இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
