Connect with us

நடிகை த்ரிஷா குழந்தையாக இருக்கும் வைரல் புகைப்படம்!

trisha 1

பொழுதுபோக்கு

நடிகை த்ரிஷா குழந்தையாக இருக்கும் வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு வெளியான “ஜோடி” என்ற படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் த்ரிஷா. இப்படத்தை தொடர்ந்து சாமி, கில்லி ஆகியப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

அதேபோல் தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளார் த்ரிஷா மேலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வருவது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தமிழ் திரை உலகில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் குவித்தவர் நடிகை த்ரிஷா. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

trisha013 1589202026

இந்த நிலையில் தற்போது நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளங்கள் மூலம் வெளிவரும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனது தாயாருடன் நடிகை த்ரிஷா குழந்தையாக இருக்கும் போது புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் திடீரென இணையதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை த்ரிஷா அவரது தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

trisha 1

இதற்கிடையில் அவரது மற்றொரு பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘கெட்ட குணம் கொண்டவர்கள் நம்மிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அது நல்ல விஷயம். அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதைப் போன்றதாகும்’ என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் த்ரிஷா யாரை குப்பை என குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது, சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் திரிஷாவிற்கு 39 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. இருமுறை காதல் தோல்வியை சந்தித்து உள்ளார்.

இந்நிலையில் திரிஷாவின் இந்த பதிவு ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது ,மட்டுமில்லாமல் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது, அதற்கும் அவரே தான் பதிலளிக்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top