தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். அவர் நடித்து வரும் படப்பிடிப்புகளும் முடங்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டில் தான் வெளியே வந்து இருப்பதாகவும் 2021 ஆம் ஆண்டு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்றும் அவர் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்
மேலும் அவர் காரில் சென்று கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
த்ரிஷா நடித்து முடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பதும் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் த்ரிஷா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், அவரது சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் படமாக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
2021????
How’s that goin????? pic.twitter.com/1VrO2uwuZS— Trish (@trishtrashers) January 22, 2021