திருச்சியில் பரபரப்பு! தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து… நூலிழையில் தப்பித்த பயணிகள்!!

துறையூரில் இருந்து தம்மபட்டி சென்ற தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்ததால் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியடித்து ஒடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து சேலம் அடுத்துள்ள தம்மபட்டிக்கு பிரபல தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை பார்த்த சக பயணிகள் அவசர அவசரமாக பேருந்தின் கீழ் பேருந்தின் கீழே இறங்கினர். அதோடு பேருந்தின் இன்ஞ்சின் வெடித்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்தது.

இதனையத்து அரை மணி நேரமாக பேருந்து எரிந்து காணப்பட்டைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உப்பிலியாபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேருந்தின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் பேருந்தானது சுமார் 80% தீக்கறையானதாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கூறி உள்ளனர். பேருந்தின் தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.