இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதை தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷு கண்ணாவும், பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.
அதே போல் தனுஷின் தோழியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் தான் எழுதியிருந்த நிலையில் அனிருத் இசையமைத்து இருந்ததால் படத்தின் எதிர்பார்ப்பானது எகிற செய்தது.
இந்த சூழலில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதோடு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தனனர்.
அதன் படி, தனுஷுன் திருச்சிற்றம்பலம் படமானது நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
தற்போது படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, நேற்று ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வசூலானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.