Connect with us

சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி!! நூதன முறையில் போராட்டம்;

141655 lpg pti

Tamil Nadu

சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி!! நூதன முறையில் போராட்டம்;

சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி!! நூதன முறையில் போராட்டம்;

நம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படுவது பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். இவை மட்டுமின்றி கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து கொண்டு வருகிறது.

அதன்படி கடந்த வாரம் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக சமையல் எரிவாயு அஞ்சலி செலுத்தி புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராம மக்கள் காலியான சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஒன்றன்மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி அதன் மீது மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் தமிழகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு போராடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top