Entertainment
இந்த வாரமும் தொடரும் முக்கோணக் காதல்!!!
கடந்த வாரம் கவின், சாக்ஷி மற்றும் லோஸ்லியாவுடன் நெருங்கிப் பழகி வந்தார். இவர்களில் யாரை அவர் காதலிக்கிறார் என்பது யாராலும் கணிக்க முடியாத மாதிரியாக இருந்தது.
தான் யாரைக் காதலிக்கிறோம் என்று கவினின் மனநிலை தடுமாறியது. ஒருபுறம் சாக்ஷியிடமும் பேசினார், மறுபுறம் லோஸ்லியாவிடமும் நெருக்கம் காட்டினார். இறுதியில் அவருடைய அணுகுமுறை புதிய பிரச்னைக்கு வழிவகுத்தது.

கடந்த வாரம் முழுவதும் இதே பிரச்னை தான் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தின. கமல்ஹாசன் முன்பும் இதே விவகாரம் தான் கடந்த 2 நாளாக அதிகளவில் பேசப்பட்டது. முடிவில் கவினிடம் பேசிய கமல்ஹாசன், இரு பெண்களுடன் அவர் நடந்து கொண்ட அணுகுமுறைக்கு கமல் கண்டனங்களை தெரிவித்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில் கவினிடம் பேசும் லோஸ்லியா, ”நீ நடிக்கிறாய் என்று தவறாக புரிந்துக் கொண்டேன். எனக்கு உடம்பு சுகமில்லாமல் போன போதும் என்னை நீ தான் கவனித்துக் கொண்டாய். இப்போது தான் எனக்கு புரிகிறது நீ நடிக்கவில்லை என்று. நீ உண்மையாகத் தான் இருந்தாய்” என்று கூறுகிறார்.
தற்போது கவின், லோஸ்லியா இடையேயான உரையாடல் மறுபடியும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
