ஒரேநாளில் லட்சாதிபதி.. வீட்டின் பழைய குப்பைக்குள் கிடைத்த பணப் புதையல்!

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் ராபர்ட்- பாட்ரிசியா என்ற ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்தத் தம்பதியினர் இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டை வார இறுதி நாட்களில் வீட்டை சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் இந்தவாரம் சுத்தம் செய்கையில் வீட்டில் இரண்டு பெட்டிகள் இருப்பதைக் கண்டுள்ளனர். அந்தப் பெட்டிகளைத் திறந்து பார்க்கையில் கருப்பு நிறப் பெட்டியில் சுமார் 68 ஆயிரம் டாலர் இருப்பதைப் பார்த்து ஷாக் ஆகியுள்ளனர்.

இந்தப் பணமானது பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டு இருந்தது. வீட்டில் பணப் புதையல் கிடைத்த சம்பவம் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து இந்தத் தம்பதியினர் இந்தப் பணத்தின் மூலம் தங்களுக்கு இருக்கும் கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழ்வோம் என்று கூறி உள்ளனர்.

68,000 ஆயிரம் டாலர் என்றால் இந்திய மதிப்பில் 51 லட்சம் ரூபாய் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews