டி.ஆர்.பி தேர்வு என்னும் ஆசிரியர் தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

டிஆர்பி என்று கூறப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கையை ஏற்று கால கவசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று, கணினி ஆசிரியர் நிலை ஒன்று ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன என்பதும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் ஒரு சிலரின் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழக அரசின் ஆணைப்படி தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சார்ந்த மென்பொருள் பரிமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment