நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் பள்ளிமாணவர்கள் சாகசம் என்ற பெயரில் விபரீத முயற்சிகள் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இவற்றை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் திருவண்ணாமலையிலிருந்து பெங்கலூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளிலும், கம்பியை பற்றி தொங்கியபடிபயணம் செய்யும் வீடியோ பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்யும் தற்போது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.