சென்னையில் அட்ராசிட்டி… கையில் கத்தியுடன் ரயில் பயணம்… வைரல் வீடியோ!!

கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னை பொறுத்தவரையில் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இத்தகைய சம்பவங்களை  தடுக்கும்  வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் சென்னையில் ஓடும் ரயிலில் மாணவர் ஒருவர் கையில் கத்தியை காட்டி மற்றவர்களை மிரட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு குழுவினர் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போல் பதிவாகியுள்ளது.

அதில் மாணவர்களில் ஒருவர் கையில் ஒரு கத்தியை வைத்து ரயிலின் பெட்டியையும் தாக்கிய சம்பவமானது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தகைய சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் பச்சையப்பா கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

இவர்கள் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறிய பிறகு இவ்வாறு நடந்து கொண்டதாகவும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.