துபாயில் இருந்து வருபவர்களுக்கு தனிமை மற்றும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை- மாநகராட்சியின் அதிரடி!
தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் சுகாதார பணிகள் வேகமெடுத்து வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா அறிகுறியுடன் வந்து விடுகிறார்கள்
இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் சரியான பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்றால் கொரோனா இவர்களை தாக்குவது மட்டுமல்லாமல் சுற்றியுள்ளோரையும் தாக்குகிறது.
இதனால் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் நுழைந்த உடன் ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் அவசியமாக இருக்கிறது.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபத்தில்லாத பயணிகள் பட்டியலில் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகம் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரகம் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் தேவையில்லை என மும்பை மாநகராட்சி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து துபாய் நாட்டில்தான் அதிகம் பேர் கட்டிட தொழிலாளிகளாகவும் இன்னும் பல தொழிலாளிகள் ஆகவும் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
