Connect with us

மாஸ்க் போடமாட்டேன்னு அடம்பிடித்த விமான பயணி! விமானத்தை தரையிறக்கிய பைலட்!

Untitled 80

செய்திகள்

மாஸ்க் போடமாட்டேன்னு அடம்பிடித்த விமான பயணி! விமானத்தை தரையிறக்கிய பைலட்!

மாஸ்க் போடமாட்டேன்னு அடம்பிடித்த விமான பயணி! விமானத்தை தரையிறக்கிய பைலட்!

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி மாஸ்க் அணிதல், கொரோனாத் தடுப்பூசி போடுதல், சமூக இடைவெளி போன்றவை பொதுமக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் அமெரிக்காவில் விமான பயணி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானம் தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.

விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான பணியாளர்கள் எவ்வளவு கூறியும் மாஸ்க் அணியவில்லை.

இதனால் விமானத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பயணி தன்னுடைய கருத்தில் இருந்து சற்றும் பின் வாங்காத நிலையில் கடுப்பாகிய பைலட் மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

அதன்பின்னர் மாஸ்க் போட மறுத்த பயணியை போலீசாரிடம் ஒப்படைக்க, போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.

மேலும் அந்தப் பயணியின் பயண அனுமதி ரத்து செய்யப்பட்டதுடன், விமான பயணத்திற்கு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top