சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரயில்.!! ஓட்டுனர் குதித்து ஓடி எச்சரிக்கை;
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் நின்றதால் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ரயில் மாலை 4:25 மணிக்கு கடற்கரை ரயில் நிலையம் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் ரயில் ஓட்டுனர் குதித்து தப்பினார் என்றும் தூய்மைப் பணியாளர்கள் கூறினர்.
கட்டுப்பாட்டை இழந்து ரயில் வந்தபோது நடைமேடையில்இருந்து விலகிச் செல்லும்படி ஓட்டுநர் எச்சரித்தார். ரயில் நிலையத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் நல்வாய்ப்பாக ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.
மின்சார ரயில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள் மூன்றாவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை ரயில்நிலையம் முதல் தாம்பரம் மின்சார ரயில் தடம்புரண்டு நடை மேடை மீது ஏறி நின்றதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மூன்றாவது நடைமேடையில் இருந்து புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
