Connect with us

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்: எதற்காக தெரியுமா?

strike

தமிழகம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்: எதற்காக தெரியுமா?

ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 3-ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என பல்வேறு சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூடிய பேட்டா இன்னும் உயர்த்தி வழங்கப்பட வில்லை என்றும் ஏற்கனவே கொடுத்த பேட்டாவையும் குறைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதே போல் 36 மாத காலமாக புதிய ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என கூறியுள்ளனர். இதனால் அடுத்த மாதம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அல்லது அதற்குப் பின்னர் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top