Connect with us

ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல அப்பு. பொங்கல் சிறப்பு பேருந்து சேவையால் 138 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய போக்குவரத்து துறை!

Untitled 1

செய்திகள்

ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல அப்பு. பொங்கல் சிறப்பு பேருந்து சேவையால் 138 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய போக்குவரத்து துறை!

ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல அப்பு. பொங்கல் சிறப்பு பேருந்து சேவையால் 138 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய போக்குவரத்து துறை!

தமிழர்களின் தலைசிறந்த பண்டிகை பொங்கல் பண்டிகை, தீபாவளியை வெளியூர்களில் கொண்டாடினாலும் பொங்கல் பண்டிகையின் கொண்டாட நாம் கூடுவது கிராமங்களில் மட்டுமே.

பண்டிகை காலம் என்றாலே சொந்த ஊருக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கும் அரசாங்கம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11, 12, 13 என 3 நாட்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

அதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் தமிழக அரசு 17, 18, 19 என மூன்று நாட்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

மொத்தமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் 3 கோடியே 22 லட்சம் மக்கள் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல் திரும்ப வெளியூருக்குக் கிளம்பியபோது 3 கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் முடங்கியதால் பேருந்து சேவைகளும் முடங்கிக் கிடந்தது.

இந்த ஆண்டு கடந்த இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து சுமார் 138 கோடியே 7 இலட்சம் ரூபாய் வருவாய் போக்குவரத்து துறையால் ஈட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையினை தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top