News
2019-2020 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து ரீதியான அறிவிப்புகள்
மத்தியில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2019-20ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளது. முதல் முறையாக நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொழில்துறை ரீதியான திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் சில:
* 5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும்.
* சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்த சூழலிலும், இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* சில்லறை மற்றும் வணிகம், ஊடகம், விமானத்துறை உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகள் கிடைக்க ஊக்குவிக்கப்படும்
* சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக இந்தாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு
சரக்கு போக்குவரத்திற்காக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது
* ஒரே நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டு வரப்படும்.
* 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்து, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்.
* உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த விலையில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
* கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
