மீண்டும் பழைய நேரத்திற்கு மாற்றம்! குஷியில் மதுப்பிரியர்கள்; தமிழகத்தில் 10 மணி நேரம் டாஸ்மாக் கடை திறப்பு!

நம் தமிழகத்திற்கு அதிக வருமானம் தரும் தொழிலாக காணப்படுவது மதுபான விற்பனை தான். இந்த மதுபான கடைகளுக்கு எதிராக பலரும் முழக்கமிட்டு வருவர். இருப்பினும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

டாஸ்மாக்

 

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி 2020ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பரவி அனைவருக்கும் பெரும் இன்னலை ஏற்படுத்திய ஒரு வைரஸ் கிருமி கொரோனா.இந்த கொரோனா காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நம் தமிழகத்திலும் அறிவிக்கப்பட்டன.

அதன் பின்னர் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் அனைத்து கடைகளும் இயல்பு நேரத்திற்கு திறக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் சற்று நேரம் மாற்றப்பட்டது.

அதன்படி தமிழகத்தில்  டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பழைய நேரத்துக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment