கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாலிக்கு தங்கம் திட்டம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறி வந்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது தாலிக்கு தங்கம் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று காலை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து இல்லை என்று கூறினார். இந்த நிலையில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெண்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்று கூறியுள்ளார்.
பெண்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக அமையும் என்று அவர் பேசினார். தாலிக்கு தங்கம் திட்டத்தை பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டமாக மாற்றி உள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார். மனிதநேயத்துடன் மக்கள் மீது அக்கறையுடன் திராவிட மாடலின் படி திட்டங்களை செயல் படுகிறோம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.