Connect with us

அடுத்த 6 மணி நேரம் ரொம்ப முக்கியம்; தாழ்வு மண்டலமாக உருமாற்றம்!

புதிய காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலம்

செய்திகள்

அடுத்த 6 மணி நேரம் ரொம்ப முக்கியம்; தாழ்வு மண்டலமாக உருமாற்றம்!

நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று கூறியிருந்தது அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் அவை வலுபெற்று தாழ்வு மண்டலமாக அடுத்த 6 மணி நேரத்தில் மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வலு பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற பதினோராம் தேதி காலை வட தமிழக கடற்கரையை வந்தடையும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா-காரைக்கால் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு வட தமிழக கடலோர மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இவை அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top