தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவி கொண்டு வருகிறது. இருப்பினும் வங்கக்கடலில் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி காணப்படுகிறது. இதன் விளைவாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை, மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக காணப்படுகிறது. அதன்படி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் கண்டிப்பாக புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த ஒரு புயலின் பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.