Connect with us

ரயில்கள் மோதி விபத்து: 50 பேர் படுகாயம்

Capture 29

தமிழகம்

ரயில்கள் மோதி விபத்து: 50 பேர் படுகாயம்

கடந்த சில நாட்களாகவே ரயில் விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ரயில்விபத்தில் 50 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானை நோக்கி பகத் கி கோத்தி என்ற பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதே போல மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் ஒன்று சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நள்ளிரவு 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பயணிகள் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 50 -க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பலி எண்ணிக்கை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top