
தமிழகம்
அதிர்ச்சி..! ஆசிரியர்களுக்கு ’செக்’ வைத்த பள்ளிக்கல்வி இயக்ககம்..?
மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அரசு பள்ளிகளில் படிக்க கூடிய மாணவர்கள் குறிப்பாக 4-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையில் படிக்ககூடிய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த அனைத்து வகை ஆசிரியர்களை முதலில் அடையாளம் கண்டறிய வேண்டும் என கூறினார்.
இதற்காக ஆசிரியர்களுக்கு அரை மணி நேரம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்ச்சி அளிக்ககூடிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
மேலும், ஆசிரியர்களுக்கு தேர்வுகள் முடிந்த நிலையில் தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கு வருகின்ற 30,31 ஆகிய இரண்டு தேதிகளில் பயிற்ச்சி வகுப்புகள் தொடங்கும் கூறியுள்ளார். பயிற்ச்சி விவரங்கள் எப்போது நடைபெறும் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
