வெயிலால் தார் ரோடு உருகுவதை பார்த்திருக்கின்றோம், ரயில் தண்டவாளம் உருகியதா? அதிர்ச்சி புகைப்படம்..!

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் ஒரு சில நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பத்தை தாண்டி பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் கடுமையான வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெயில் நேரத்தில் பல்வேறு ஆச்சரிய நிகழ்வுகள் நிகழும் என்பதும் குறிப்பாக தார் ரோடு இளகும் என்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தார் ரோடு உருவது போல் ரயில் தண்டவாளம் உருகி வளைந்து காணப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

track1

வெப்பநிலை உயர்வு காரணமாக சூரத்தில் உள்ள ஒரு ரயில் தண்டவாளம் உருகி பாம்புபோல் வளைந்து இருந்ததை பார்த்து ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த தண்டவாளம் 200 மீட்டர் அளவில் புதிதாக போடப்பட்ட தாகவும் பெற்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த ரயில் தண்டவாளத்தில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இளகிய தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கடுமையான வெப்பம் காரணமாக ரயில் தண்டவாளம் உருகியது கூறப்பட்டாலும் இதுவரை ரயில் தண்டவாளம் உருகியதாக எந்தவிதமான சம்பவம் நடைபெறவில்லை என்றும் இதுதான் அநேகமாக முதல் சம்பவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில் தண்டவாளங்கள் வளைந்து பாம்பு போல் இருப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். கடும் வெப்பத்தின் தாக்கத்தை காட்டும் இந்த ரயில் பாதையின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் உட்பட பல உலக நாடுகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசி வருகின்றன. இதன் காரணமாக கடும் வறட்சி ஏற்படும் என்றும் குறிப்பாக தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்கு அப்பால் உள்ள பகுதிகளில் கடல் நீரே சூடாகி உள்ளிருக்கும் அளவுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு உலக அளவில் வெப்பம் அதிகரிக்கும் என கடந்த ஆண்டு உலக வானிலை அமைப்பு எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள வானிலையை தீவிரமாக கணித்து வரும் உலக வானிலை அமைப்பு இந்த ஆண்டு பூமி 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலை தாண்டும் என்று கணித்துள்ளது. இதனால் இன்னும் வருங்காலத்தில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் அதனால் பல ஆச்சரியங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.