கனமழை எதிரொலி: ரெயில்களின் நேரங்கள் மாற்றம்

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கனமழை காரணமாக ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை வரும் ரயில்கள் மற்றும் சென்னையில் இருந்து கிளம்பும் ரயில்களின் நேரம் குறித்து பயணிகள் மற்றும் பயணிகளின் உறவினர்கள் அறிந்து கொள்ள உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த எண்களில் தொடர்பு கொண்டு சென்னைக்கு வரும் ரயில்கள் குறித்த நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

சென்னைக்கு வரும் ரயில்கள் மற்றும் சென்னையில் இருந்து கிளம்பும் ரயில்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த எண்களை இதோ

1. 044-25330952
2. 044-25330953
3. 8300052104

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment