ஓடும் ரயிலில் பயங்கரம்: கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு படுகொலை.!!!

சென்னை பரங்கி மலையில் ரயிலில் ஏறிய கல்லூரி மாணவியை தள்ளி விட்டதில் கழுத்து துண்டித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யா(20). இவர் தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்ததாக கூறப்படுகிறது.

கவனமா இருங்க..!! 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!!!

அப்போது ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர், திடீரென ரயில் வந்தபோது சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். அப்போது கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார்.

சம்பவம் அறிந்த இரயில்வே போலீசார் மற்றும் பரங்கி மலை போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கனமழை எதிரொலி… 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், ஒருதலையாக சதீஷ் காதலித்ததாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment